சீக்கிரமே பெரியம்மாவாகப் போகிறார் காஜல் அகர்வால்!

காஜல் இப்போது சுவாரஸ்யமாக காத்திருப்பது தனது அடுத்த படத்தின் வெளியீட்டுக்காகக் கூட இல்லை... தனது தங்கை பெற்றெடுக்கப் போகும் மழலையின் முகம் காணவே! என்கிறது டோலிவுட்.
சீக்கிரமே பெரியம்மாவாகப் போகிறார் காஜல் அகர்வால்!
Updated on
1 min read

காஜல் அகர்வாலுக்கு நிஷா அகர்வால் என்றொரு தங்கை இருக்கிறார்.

நிஷாவும் நடிகையாக இருந்தவர் தான். ஆனால் பிசினஸ் மேன் கரண் வலேச்சாவுடனான காதல் டேட்டிங்கில் முடிய. இரு வீட்டார் சம்மதத்துடன் சில காலம் டேட்டிங்கில் இருந்த இந்த ஜோடி, பின்னர் 2013 டிசம்பர் 28 ஆம் நாள் திருமணம் செய்து கொண்டது. தற்போது நிஷா நிறைமாத கர்ப்பிணி. நிஷாவின் குழந்தைக்கு காஜல் பெரியம்மாவாகப் போகிறார். இது டோலிவுட்வாசிகளிடையே ரசனையான ஹாஸ்யம் போலப் பரவிக் கொண்டிருக்கிறது.

டோலிவுட்டில் குணச்சித்திரம், கட்டுப்பெட்டி கிராமத்துப் பெண், அல்ட்ரா மாடர்ன் மங்கை, மகதீராவில் காதல் நிறைவேறாமல் உயிர் விடும் இளவரசி, நேனே ராஜூவில் அந்நியோன்யமான காதல் மனைவி. ஜனதா கரேஜில் குத்துப் பாட்டு டான்ஸர்... என, தான் ஏற்று நடித்த அத்தனை கதாபாத்திரங்களிலும் திறம்பட தனது பங்கை கச்சிதமாகச் செய்து அப்ளாஷ்களை அள்ளிக் கொண்ட நடிகைகளில் காஜலும் ஒருவர். நிஷா, காஜலை விட இளையவராக இருந்தாலும் சினிமாவை விடத் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாகத் திருமணம் செய்து செட்டிலாகி விட்டார். ஆயினும் காஜலுக்கு இன்னும் திருமணத்திற்கான நேரம் கைகூடவில்லை. 

இப்போதும் கோலிவுட், டோலிவுட்டில் காஜலுக்கான மவுசு குறையாமலே இருப்பதால் காஜல் தனது திரைப்பட ஷூட்டிங்குகள் மற்றும் அவற்றின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் படு பிஸி. தனது பிஸியான செட்யூல்களிலும் குடும்பத்தின் இனிமையான தருணங்களை இழக்காமல் பங்கேற்று தனது கடின உழைப்பிற்கான சக்தியை அதிலிருந்து பெற்றுக் கொள்கிறார் காஜல். இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் உங்களுக்கே அது புரியும்.

காஜல் இப்போது சுவாரஸ்யமாக காத்திருப்பது தனது அடுத்த படத்தின் வெளியீட்டுக்காகக் கூட இல்லை... தனது தங்கை பெற்றெடுக்கப் போகும் மழலையின் முகம் காணவே! என்கிறது டோலிவுட்.

வாழ்த்துக்கள் பெரியம்மா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com