ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கிய தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சிவ பாலாஜி வென்றுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். இதேபோல தெலுங்கிலும் கடந்த சில மாதங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி, ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது.
இந்நிகழ்ச்சியைப் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். தமிழில் 100 நாள்கள் வரை நடைபெறுகிற நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி 71 நாள்களில் நிறைவுபெற்றது. நடிகர்கள் நவ்தீப், சிவ பாலாஜி, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, சமீர், சம்பூர்ணேஷ் பாபு, தன்ராஜ், பிரின்ஸ் நடிகைகள் அர்ச்சனா, முமைத் கான், ஜோதி, ஹரி தேஜா, திக்ஷா பந்த், மாடலிங் துறையைச் சேர்ந்த கத்தி கார்த்திகா, பாடகிகள் மது ப்ரியா, கல்பனா ராகவேந்தர் மற்றும் மகேஷ் கத்தி என 16 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் நடிகர் சிவ பாலாஜி வெற்றி பெற்று பரிசுத்தொகையான ரூ. 50 லட்சத்தைத் தட்டிச் சென்றார். கடந்த 14 வருடங்களாகத் திரைத்துறையில் உள்ள சிவ பாலாஜி தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் நடித்துள்ளார். இரண்டாம் இடம், நடிகர் ஆதர்ஷ் பாலகிருஷ்ணாவுக்குக் கிடைத்தது.

கடைசி 5 பேரில் சிவ பாலாஜி, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, அர்ச்சனா, ஹரி தேஜா, நவ்தீப் ஆகியோர் இடம்பெற்றார்கள். முதலில் அர்ச்சனா வெளியேறினார். அதற்குப் பின்னர் நவ்தீப், ஹரி தேஹா வெளியேறினார்கள். இறுதியில் சிவ பாலாஜி, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா இடையே நடைபெற்ற உச்சக்கட்டப் போட்டியில் சிவ பாலாஜி வெற்றி பெற்றார். இவர், தமிழில் சில படங்கள் நடித்துள்ள நடிகை மதுமிதாவின் கணவர். இங்க்லீஷ்காரன் என்கிற தமிழ்ப் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளார்கள். 2009-ல் திருமணம் நடைபெற்றது.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு வெளியேறிய பெரும்பாலான போட்டியாளர்கள் நேற்றைய இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகப் பங்கேற்றார்கள். நடிகை முமைத் கான், பாடகி கல்பனா ராகவேந்தர் ஆகியோர் மட்டும் வரவில்லை.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வாரம் நிறைவுபெறுகிறது. ஞாயிறன்று இறுதிச்சுற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


