கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கருணாநிதி உடல் நலம்: நடிகர் சிவகார்த்திகேயன் விசாரிப்பு!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் நலம் விசாரித்தார்...

News image
Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:55 am

எழில்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் நலம் விசாரித்தார்.

ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  நேற்று, கருணாநிதியின் உடல் நலம் தொடர்பாக நடிகர்கள் விஜய், அஜித், கவுண்டமனி ஆகியோர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்கள்.

மருத்துவமனைக்கு நேற்று காலை 10 மணிக்கு விஜய் வந்தார். மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார். நடிகர் அஜித் இரவு 8.40 மணியளவில் மருத்துவமனைக்கு வந்தார். மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார். நடிகர்கள் கவுண்டமணி, விவேக் உள்பட ஏராளமானோர் மருத்துவமனையில் நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனைக்கு இன்று வந்த நடிகர் சிவகார்த்திகேயன்,  ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரைச் சந்தித்து நலம் விசாரித்தார். 

கல்லீரல் மற்றும் ரத்தத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்வதற்காக மருத்துவமனையில் மேலும் சில நாள்கள் கருணாநிதி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.  தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கருணாநிதிக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதில், அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.