தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கருணாநிதி மறைவு குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பிக் பாஸ் போட்டியாளர்கள்! (விடியோக்கள்)

கருணாநிதி குறித்த நினைவுகளைப் போட்டியாளர்கள் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். இன்றைய நிகழ்ச்சியில் இக்காட்சிகள்...

News image
Updated On :8 ஆகஸ்ட் 2018, 7:20 am

எழில்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 100 நாள்கள் மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்றது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். 

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் 2-ம் பாகம், 50 நாள்களைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் கருணாநிதியின் மறைவு குறித்து அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட போட்டியாளர்களும் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

பிறகு, கருணாநிதி குறித்த நினைவுகளைப் போட்டியாளர்கள் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். இன்றைய நிகழ்ச்சியில் இக்காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.