வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸின் தென்னிந்திய மண்டலத்திற்கு தூதுவராகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்!

ரிலையன்ஸ் டிரெண்ட்ஸின் தமிழகத் தூதுவராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்ட நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 23)

News image
Updated On :24 ஆகஸ்ட் 2018, 7:18 am

DIN


ரிலையன்ஸ் டிரெண்ட்ஸின் தமிழகத் தூதுவராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்ட நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 23) சென்னை அண்ணா நகரில் உள்ள வி.ஆர் மாலில் உள்ள ரிலையன்ஸ் டிரெண்ட்ஸில் காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற்றது.

Story image

இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஜான் ப்ரிட்டோ நடனக் குழுவினரின் நடனத்துக்குப் பின்னர், ரிலையன்ஸ் ட்ரென்ஸ்டின் பெஸ்டிவல் கலெக்‌ஷனாக புதிய ஆடைகள் அறிமுகங்கள் பேஷன் ஷோவாக நடைபெற்றது. 

Story image

ரிலையன்ஸ் டிரெண்ட்ஸின் தலைமை செயல் அதிகாரி விபின் தியாகி கலந்து கொண்டு, தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மண்டலத்திற்கு தூதுவராக ‘கீர்த்தி சுரேஷ்’ என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுடன் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. 

முதலில் பேசிய விபின் தியாகி கூறுகையில், ‘கீர்த்தி சுரேஷ் அழகும் அறிவும் நடிப்புத் திறனும் ஒருங்கே பெற்ற அரிதான நடிகை. அவருடனான எங்கள் பயணம் ஒரு இனிய துவக்கமாக அமைந்து வாடிக்கையாளர்களுடன் வலுவான பிணைப்பை உருவாக்க உதவும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் 61-க்கும் மேற்பட்ட ரிலையன்ஸ் கடைகள் உள்ளன மேலும் தென் மண்டலத்தில் முழுவதும் 229 கடைகள் உள்ளன. ரிலையன்ஸ் ஃபேஷன் துறையில் மிகப் பலமாக தடம் பதித்துள்ள நிலையில் மேலும் விரிவாக்கவிருக்கிறோம்’ என்று அவர் கூறினார்.

Story image

கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ‘பள்ளி நாட்கள் முதலே ரிலையன்ஸ் ப்ராண்டை பயன்படுத்தியுள்ளேன். இப்போது இந்த ப்ராண்டில் தென்னிந்த முகமாக இருப்பதில் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எனது நன்றி’ என்று கூறினார்.

கீர்த்தி சுரேஷின் ட்விட்டர் பக்கத்தில் அழைப்பினை பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.