
யாஷிகா மீது காதல் கொண்டேன் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மஹத் கூறியது அவருடைய காதலை முறித்துள்ளது.
அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான மஹத், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவைக் காதலித்து வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு, மஹத்தைத் தான் காதலிப்பதாக நடிகை யாஷிகா நிகழ்ச்சியில் தெரிவித்தார். தற்போது யாஷிகாவைத் தானும் காதலிப்பதாக மஹத் கூறியுள்ளார். இந்நிலையில் இதுபற்றி மஹத்தின் காதலி பிரச்சி மிஸ்ரா இன்ஸ்டகிராமில் எழுதியதாவது:
என்னை விரும்பிய மஹத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனுப்பினேன். அந்தச் சமயத்தில் எங்களிருவரின் வாழ்க்கை குறித்து முடிவெடுத்தோம். தற்போது எனக்குப் பரிதாபமான மோசமான மெசேஜ்களை அனுப்புவர்களுக்கு, அவர் என்னைக் காதலித்தார். நான் இன்னமும் காதலிக்கிறேன். அதேசயம் நான் தற்போது அவருடன் இல்லை. ஆனாலும் அவரைத் தனியாகச் சந்தித்து எல்லாவற்றையும் குறித்துப் பேசுவேன்.
அவர் யாஷிகாவைக் காதலிக்கிறார். தற்போது அது வெளியே வந்துவிட்டது. இதனால் நான் மனத்தால் காயப்பட்டுள்ளேன். ஆனால் இதனால் என் வாழ்க்கை மாறாது. நானே என்னை பார்த்துக்கொள்ளப்போகிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ஆதரவாக இருக்கும் ஜனனிக்குக்கூட உறுதுணையாக அவர் இருப்பதில்லை.
அவரைப் பற்றி என்னிடம் எதுவும் கேட்கவேண்டாம் என்று உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. இது என் சொந்த வாழ்க்கை. நான் பார்த்துக்கொள்கிறேன். நான் தற்போது மஹத்திடம் இல்லை. எனவே நான் பணியாற்ற என் சமூகவலைத்தளத்தை விட்டு வெளியேறுங்கள் என்று அறிக்கையில் கூறியுள்ளார். எனினும் இந்தப் பதிவைப் பிறகு நீக்கிவிட்டார் பிரச்சி மிஸ்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.