டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம்: ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் இசையமைப்பதை உறுதி செய்தார் அனிருத்!

இயக்குநர் - இசையமைப்பாளர் என்பதைவிட நண்பர்கள் என்று சொல்லலாம். நான் இளையவனாக இருந்தாலும்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:51 pm

எழில்

2.0 படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கவுள்ளார். கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். துல்கர் சல்மான், சிம்பு ஆகியோரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில் அதை ஒரு பேட்டியில் அவர் உறுதி செய்துள்ளார். அனிருத் இசையமைத்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனக்கு அனிருத் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என ஷங்கர் கூறியிருந்தார். இதையடுத்து ஷங்கர் - அனிருத் கூட்டணி இந்தியன் 2 படம் மூலமாக முதல்முறையாக இணைந்துள்ளது. ரஜினி நடித்து பொங்கலன்று வெளிவரவுள்ள பேட்ட படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தியன் 2 படத்துக்கு இசையமைப்பது குறித்து தனியார் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் அனிருத் கூறியதாவது:

அவரைப் போன்ற ஒரு ஜீனியஸ் நம்மிடம் எப்படிப் பாடல் வாங்குகிறார் என்று நாம் உணராத அளவுக்கு இசையை வழங்கிக்கொண்டே இருப்போம். அந்தளவுக்கு அவருடைய கற்பனைகள் இருக்கும். இருவரும் நன்கு ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டுவிட்டோம். இயக்குநர் - இசையமைப்பாளர் என்பதைவிட நண்பர்கள் என்று சொல்லலாம். நான் இளையவனாக இருந்தாலும் என்னை ஒரு நல்ல நண்பன் போல நடத்துகிறார் என்று கூறியுள்ளார்.

இந்தப் படம் குறித்து கமல் சமீபத்தில் கூறியதாவது: 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தமிழ்நாட்டில் போட்டியிடுகிறது. இதனால், தற்போது நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகிவிடுவேன். இந்தியன் 2 படப்பிடிப்பு டிசம்பர் 14 முதல் தொடங்குகிறது என்றார். இதனால் இந்தியன் 2 படம் கமல் நடிக்கும் கடைசிப் படம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.