ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராதிகா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் படப்பிடிப்பு முடித்து படக்குழுவினர் வெளிநாட்டுக்குச் சென்று ஒரு பாடல் காட்சியை படமாக்கம் செய்தனர். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடைவெளி சமயத்தில், நடிகை நயன்தாராவிடம் அங்கு வந்திருந்த குழந்தை ஒன்று கொஞ்சி விளையாடும் விடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அக்குழந்தையின் க்யூட்டான செயல்களால் நயன்தாரா பெரிதும் கவரப்பட்டார். நயன்தாராவை கட்டிப் பிடிப்பது, அவர் செய்தது போலவே செல்ஃபிக்கு போஸ் கொடுப்பது, கன்னத்தில் செல்லமாக குத்துவது ஆகிய செயல்களைச் செய்த அக்குழந்தைக்கு பலர் ரசித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
13onSpot Adorablepic.twitter.com
mdashNayantharaNayantharaDecember 14, 2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


