மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மணி ரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கும் அதிதி ராவ்!

இந்தமுறை தமிழில் நானே சொந்தக் குரல் பேச முடிவெடுத்துள்ளேன் என்று பேட்டியளித்துள்ளார்...

News image
Updated On :2 பிப்ரவரி 2018, 12:16 pm

எழில்

மணி ரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நட்சத்திரக் கூட்டத்தில் மணி ரத்னத்தின் முந்தைய படமான காற்று வெளியிடை படத்தில் கதாநாயகியாக நடித்த அதிதி ராவும் இணைந்துள்ளார். சமீபத்தில் வெளியான பத்மாவத் படத்திலும் அதிதி நடித்திருந்தார். 

இதுபற்றி அதிதி கூறியதாவது: பத்மாவத் படத்தில் நடித்ததற்காகக் கிடைக்கும் பாராட்டுகள் நான் எதிர்பாராதவை. எனக்கு 2018 அமோகமாக ஆரம்பமாகியுள்ளது. காற்று வெளியிடை படத்துக்கு அடுத்ததாக மணி ரத்னம் சார் படத்தில் மீண்டும் நடிக்கிறேன். காற்று வெளியிடை படத்தில் நடித்தபோது நிறைய கற்றுக்கொண்டேன். இப்போது மேலும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தமுறை தமிழில் நானே சொந்தக் குரல் பேச முடிவெடுத்துள்ளேன் என்று பேட்டியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.