'அட்டகத்தி' தினேஷின் மாமியாராக நடிக்கும் தேவயானி!
புதுமுக இயக்குநர் காந்தி மணிவாசகத்தின் 'களவாணி மாப்பிள்ளை' திரைப்படத்தில் 'அட்டகத்தி' தினேஷின் மாமியாராக நடிகை தேவயானி நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை: புதுமுக இயக்குநர் காந்தி மணிவாசகத்தின் 'களவாணி மாப்பிள்ளை' திரைப்படத்தில் 'அட்டகத்தி' தினேஷின் மாமியாராக நடிகை தேவயானி நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
காலம்சென்ற இயக்குனர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம். பாலுமகேந்திராவின் உதவி இயக்குநராக இருந்த இவர், 'ரேணிகுண்டா' , 'கருப்பன் திரைப்படங்களின் இயக்குனர் பன்னீர்செல்வத்திடமும் உதவியாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில் இவர் தற்பொழுது 'அட்டகத்தி' தினேஷ், அதிதி மேனன் ஆகியோர் நடிப்பில் 'களவாணி மாப்பிள்ளை' என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் தினேஷின் மாமியாராக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிகை தேவயானி நடிக்கவுள்ளார். இவர்களுடன்முனீஸ்காந்த், 'நான் கடவுள் ' ராஜேந்திரன், மனோபாலா மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். என். ஆர்.ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார்.
வரும் 15-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், இப்படம் குறித்தும் தேவயானியின் கதாபாத்திரம் குறித்தும், இயக்குநர் காந்தி மணிவாசகம் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
இந்த படம் முழுக்க முழுக்க பொள்ளாச்சி-கோவை சாலையில் உள்ள கிராமம் ஒன்றில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நிரம்பிய ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் தினேஷ் நடிக்கிறார். பணக்கார வீட்டுப் பெண்னாக அதிதி நடிக்கிறார்.
படத்தில் தேவயானியின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவருக்கும் தினேஷுக்கும் இடையே இருக்க கூடிய விஷயங்களை வைத்தே கதை நகர்கிறது. ஆனால் 'மாப்பிள்ளை', 'பூவா தலையா' போன்ற திரைப்படங்கள் போன்று இது அமையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...