எனக்கு போட்டி நானே தான்! நடிகை அனுஷ்கா பேட்டி!

அனுஷ்கா என்றால் உங்கள் நினைவுக்கு வருவது கம்பீரமான அழகான ஒரு இளவரசியாகத் தான் இருக்கும்.  ஓவியம் உயிர் பெற்று வந்தாற்போல பாகுபலி மூலம் பலரின் இதயத்தைக் கவர்ந்துவிட்டவர் அனுஷ்கா.
எனக்கு போட்டி நானே தான்! நடிகை அனுஷ்கா பேட்டி!
Updated on
2 min read

அனுஷ்கா என்றால் உங்கள் நினைவுக்கு வருவது கம்பீரமான அழகான ஒரு இளவரசியாகத் தான் இருக்கும். ஓவியம் உயிர் பெற்று வந்தாற்போல பாகுபலி மூலம் பலரின் இதயத்தைக் கவர்ந்துவிட்டவர் அனுஷ்கா. சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி கொடுத்த அனுஷ்கா பல கேள்விகளுக்கு வெளிப்படையாக மனம் திறந்து பதில் சொன்னார். 

அனுஷ்காவுக்குப் போட்டி யார் என்று கேட்கப்பட்டதற்கு அவர் சொன்ன பதில் அறிவு பூர்வமாக இருந்தது. நடிப்பில் போட்டி இருந்தால் நல்லதுதான். எனக்கு போட்டியாக என்னையே தான் நான் நினைத்துக் கொள்வேன். எந்தக் கதை எனக்கானதோ அது நிச்சயம் என்னைத் தேடி வரும். என்னைத் தேடி வராதவை எனக்கானதல்ல என்று நினைத்துக் கொள்வேன். தவிர நான் நடிக்கும் படங்களில் என் ரோல்கள் தனித்துத் தெரியும்படியாக முழு  அர்ப்பணிப்புணர்வுடன் நடிப்பேன்.

தமிழ்ப் படங்களில் சமீப காலமாக ஏன் நடிப்பதில்லை என்று கேட்டதற்கு அனுஷ்கா கூறுயது, 'பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் அடுத்தடுத்து நடித்ததால் தமிழில் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அதே நேரம் பாகுபலி, ருத்ரமாதேவி இவற்றுடன் சைஸ் ஜீரோ, ஊப்ரி என நான் தெலுங்கில் நடித்த படங்கள் எல்லாம் தமிழிலும் ரிலீஸ் ஆனது. ஊப்ரி தோழா என்ற பெயரிலும், சைஸ் ஜீரோ ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற பெயரிலும் ரீ மேக் செய்யப்பட்டது. இவைத் தவிர சூர்யாவுடன் சிங்கம் 3 படத்திலும் நடித்திருந்தேன். ஆனாலும் கோலிவுட்டில் நீண்ட ப்ரேக் ஏற்பட்டுவிட்டது உண்மைதான். 

அடுத்து கெளதம் மேனனின் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறேன். படம் பற்றி இதுவரை எந்த தகவலும் தெரியாது. நல்ல கதையம்சம் உள்ள தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். சவாலான கதாபாத்திரங்கள் மீது எனக்கு எப்போதும் ஈடுபாடு உண்டு. ஒரு கதையைக் கேட்கும் போதே அது மனத்தில் பசையாக ஒட்டிக் கொள்ள வேண்டும். வித்யாசமாக இருக்க வேண்டும். அதில் நான் நடிக்க வேண்டும் என்று உள்ளுணர்வு தூண்ட வேண்டும். அப்போதுதான் அது எனக்கு சரியாக இருக்கும்.

என்னிடம் சமீபத்தில் கதை சொல்ல வருகிறவர்கள் பாகுபலி, அருந்ததி மாதிரி டிட்டோ கேரக்டர்களை பண்ணச் சொல்கிறார்கள். கேட்கவே அலுப்பாக இருக்கும். ஸ்டீரியோ டைப்பாக நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. சுவாரஸ்யமான கதாபாத்திரம் எனில் நிச்சயமாக அதை ஏற்று நடிப்பேன்.

கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எனக்கு பிடிக்கும். ஆனால் ஹீரோ ஹீரோயின் என யாருக்கு  முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருந்தாலும் நல்ல கதையாக இருப்பது மிகவும் முக்கியம். தமிழ் படங்களைப் பொருத்தவரையில் தெய்வத் திருமகள் மற்றும் தாண்டவம் படங்களில் என்னுடைய கதாபாத்திரம் பிடிக்கும். விரைவில் எனக்குப் பிடித்த படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்’ என்று உறுதி மொழி தந்தார் அனுஷ்கா.

வெல்கம் பேக் அனுஷ்கா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com