ஆறு அடியுடன் நான் ரெடி! தீபிகா மற்றும் கத்ரீனாவுக்கு நடிகர் அமிதாப் பச்சன் சவால்!

நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளங்கில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர்.
ஆறு அடியுடன் நான் ரெடி! தீபிகா மற்றும் கத்ரீனாவுக்கு நடிகர் அமிதாப் பச்சன் சவால்!
Published on
Updated on
1 min read

நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளங்கில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். அவருடைய போட்டோக்களை பகிர்வதிலிருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் நடித்த பழைய படங்களைப் பற்றி ரசிகர்களுடன் பேசி மகிழ்வது வரை இந்த நெட்வொர்க்கை அருமையாக பயன்படுத்தி வருபவர். உலக ட்விட்டர் பயனாளர்களில் அதிகளவில் பின் தொடரப்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பத்வாவத் புகழ் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் பாலிவுட் சூப்பர் ஆக்டர் அமீர் கான் ஆகியோருடன் நடிக்கும் போது தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைஃப் உயரப் பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்ட செய்தித்தாளைப் படம் எடுத்து, அதை தன் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவேற்று, பகடி செய்யும்விதமாக ஒரு பதிவை எழுதியுள்ளார் 'பிக் பாஸ்’ அமிதாப். 

பாலிவுட்டுக்கு நேர்ந்த இந்த உயர சோதனையை சரி செய்யும் விதமாக, ஒரு உபாயத்தை அமிதாப் கூறியிருக்கிறார். ஒரு வினோதமான விண்ணப்பத்தை தன் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் பதிவு செய்தார் அமிதாப். அதன் தலைப்பு ஜாப் அப்ளிகேஷன். 

பெயர் - அபிதாப் பச்சன் 
பிறந்த தினம் - 11.10.1942
வயது - 76
அனுபவம் - 49 வருடங்கள், கிட்டத்தட்ட 200 படங்கள்
உயரம் - 6’2’’

நடிக்க ரெடி....உங்களுக்கு உயரப் பிரச்னைகள் ஒருபோதும் இருக்காது!

இது பற்றி ஷாஹித் மற்றும் அமீர் என்ன நினைப்பார்களோ தெரியாது, ஆனால் நிச்சயம் கத்ரீனா மற்றும் தீபிகாவின் முகங்களில் புன்னகை பூக்கக் கூடும். தீபிகாவுடன் 'பிகு' என்ற படத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னால் அமிதாப் நடித்துள்ளார். அப்படத்தில் அமிதாப் பச்சனின் மகளாக தீபிகா நடித்திருப்பார். அண்மையில் வெளியான பத்மாவத் படத்தில் தீபிகாவின் சிறப்பான நடிப்பைப் பார்த்து அமிதாப் தன் கைப்பட ஒரு பாராட்டுக் கடிதத்தை எழுதி அனுப்பினார். 

கத்ரீனா கைஃப்புடன் 'தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' படத்தில் நடித்து முடித்துள்ளார் அமிதாப். இதில் அமீர் கான் மற்றும் பாத்திமா சனா ஷேக்ந உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் திரைக்கு வரும்.

'சாத் இந்துஸ்தானி' என்ற படத்தின் மூலம் பிப்ரவரி 15, 1969-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார் அமிதாப் பச்சன். அன்றிலிருந்து இன்று வரை இடைவிடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த 49 வருட நிறைவை ஒட்டி தானே ஒரு கவிதையை எழுதி, அதை ரசிகர்களுக்காக வாசித்தார். பன்முகத் திறமையுடைய அமிதாப்ஜியின் கவிதை வலையுலகில் வைரலாகி வருகிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com