விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் காக்கிக்கே ஒரு கர்வம்: ஜோதிகாவுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு!

ஜோதிகாவின் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் காக்கிக்கே ஒரு கர்வம். நீங்கள் தொடர்ந்து கலையில்...

News image
Updated On :19 பிப்ரவரி 2018, 5:33 am

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் - நாச்சியார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இசை - இளையராஜா. ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர். இப்படத்துக்காக தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய பாடலொன்றை ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார். தணிக்கையில் நாச்சியார் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு பாலா இயக்கியுள்ள இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியானது. 

இந்நிலையில் நாச்சியார் படத்தை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் எழுதியுள்ளதாவது:

நாச்சியார் பார்த்தேன். கலையின் நிகழ் நீரோட்டத்தில் நிற்கிறீர்கள்; பலே பாலா! ஜோதிகாவின் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் காக்கிக்கே ஒரு கர்வம். நீங்கள் தொடர்ந்து கலையில் இயங்க வேண்டும் சகோதரி. 

தம்பி ஜீ.வி! உன் ஜீவிதத்தில் ஒரு படம் இது; பாராட்டுகிறேன்.

ஒளிப்பதிவு செய்த ஈஸ்வர்! வெள்ளைக்காரக் கண்களோடு பிறந்த தமிழனப்பா நீ! படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள் என்று வைரமுத்து பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.