'காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்' நடிகை குஷ்புவுடன் இணைந்த 'நாம் தமிழர்' சீமான்!

தமிழ்நாட்டில் டிராபிக் ராமசாமியைத் தெரியாதவர்ள் யாரும் இருக்க மாட்டார்கள். அவரது வாழ்க்கையைத் தழுவி 'டிராபிக் ராமசாமி'
'காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்' நடிகை குஷ்புவுடன் இணைந்த 'நாம் தமிழர்' சீமான்!
Published on
Updated on
1 min read


 
தமிழ்நாட்டில் டிராபிக் ராமசாமியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சென்னையின் உண்மைக் கதாநாயகன் அவர்தான். எனக்கென்ன என்று ஒதுங்கிப் போகும் சமூகத்தில் தன்னலமின்றி அடுத்தவர்காக அக்கறையுடன் குரல் கொடுத்து போராடிவரும் ஓர் மனிதப் படையாகத் திகழ்பவர் அவர். அவரது வாழ்க்கையைத் தழுவி 'டிராபிக் ராமசாமி' என்ற பெயரில் திரைப்படமொன்று தயாராகி வருகிறது.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக நடிக்கிறார், நடிகை ரோகிணி அவருக்கு மனைவியாக நடிக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகரனின் உதவி இயக்குநராகப் பணி புரிந்த விஜய் விக்ரம் (விக்கி) இப்படத்தை இயக்குகிறார்.  

பிரகாஷ்ராஜ், எஸ்.வி.சேகர், ஆர்.கே.சுரேஷ், மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், அம்பிகா, கஸ்தூரி, உபாசனா, பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி சமூக அநீதிகளைத எதிர்க்கும் இளைஞனாக, ஒரு திரைப்பட நடிகராகவே கேமியோ ரோலில் நடிக்கிறார்.

இவர்களைத் தவிர அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வரும் 'நாம் தமிழர்’ சீமானும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்புவும் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.  சில ஊடகங்கள் குஷ்புவுக்கு ஜோடியாக சீமான் நடிக்கிறார் என்ற தவறான தகவலை பரப்பி வருவதை கண்டனம் தெரிவித்தார்.

டிராஃபிக் ராமசாமி படத்தில் சீமானுடன் நடிக்கவிருக்கும் செய்தி உண்மைதான். ஆனால் தனித் தனியாக சிறப்பு தோற்றங்களில் நடிக்கின்றோம். தவறான செய்திகளை வெளியிடவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.

நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூகப் போராளியைப் பற்றிய படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த பயோபிக்கை எதிர்ப்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com