அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ள ரஜினிக்கு என் வாழ்த்துகள் என ரஹ்மான் கூறியுள்ளார்.
ஜனவரி 12 அன்று சென்னையில் நேற்று இன்று நாளை என்கிற இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
25 ஆண்டு காலம் என்னை ஆதரித்த தமிழ் ரசிகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரைத்துறையில் உள்ளவர்களும் அரசியலுக்கு வரலாம். அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ள ரஜினிக்கு என் வாழ்த்துகள். ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து யோசித்து என் நிலைப்பாட்டைப் பிறகு அறிவிக்கிறேன். கலாசார நகராக சென்னை இருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
கடந்த வாரம் ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார். மேலும், வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


