இருட்டுன்னா ரொம்ப பயம்! ஸ்ருதிஹாசனின் ஜாலி பேட்டி!

இருட்டுன்னா ரொம்ப பயம்! ஸ்ருதிஹாசனின் ஜாலி பேட்டி!

நடிகை ஸ்ருதி ஹாசன் அப்பாவைப் போல மனத்தில் உள்ளவற்றை வெளிப்படையாக
Published on

நடிகை ஸ்ருதி ஹாசன் அப்பாவைப் போல மனத்தில் உள்ளவற்றை வெளிப்படையாக பேசும் இயல்புடையவர். சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில், தனது நண்பர் மைக்கேல் கோர்சேலுடன் கலந்து கொண்டார். 

இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்றும், விரைவில் திருமணம் என்றும் கோலிவுட் வட்டாரம் செய்தி பரப்பியது. ஆனால் இதுகுறித்து ஸ்ருதி தரப்பிலிருந்து  அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லை.

சமீப காலமாக ஸ்ருதி  படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. அவரே சில படங்களைத் தவிர்த்துவிட்டார். இந்நிலையில் ஆங்கில மாத இதழுக்கு அண்மையில் ஸ்ருதி பேட்டி அளித்தார். அதன் அட்டைப் படத்தை ஸ்ருதி அலங்கரிக்கிறார். புதிய ஸ்டைல் புதிய லுக்கில் காட்சியளிக்கிறார் ஸ்ருதி. இடைப்பட்ட காலத்தில் பிரத்யேமாக உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி என்று இதற்கு பிரத்யேக முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஸ்ருதி நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க தயாராகி விட்டதாக என்று தகவல்கள் வெளியானாலும் அந்தப் பேட்டியில் அவர் ஜாலியாக சில விஷயங்களை பேசியிருக்கிறார். அவற்றிலிருந்து சில :

உங்களுடன் எப்போதும் உடன் எடுத்துச் செல்லும் பொருட்கள் என்ன?

ஸ்ருதி - செல்ஃபோன், ஹெட் ஃபோன், அப்பறம் சார்ஜர். சார்ஜர் இல்லாம வெறும் செல்போன் வைச்சு என்ன பண்றது?

உங்களுக்குப் பிடித்த உடை?

ஸ்ருதி - ப்ளாக் லெதர் ஜாக்கெட். 

அண்மையில் உங்க அப்பா கொடுத்த சர்ப்ரைஸ் என்ன?

ஸ்ருதி - வேறென்ன அரசியல் தான். எங்களுக்கு அதுல சந்தோஷமும் பெருமையும் கூட.

உங்களுக்கு ஹாரர் படம் பிடிக்குமா?

ஸ்ருதி - எனக்கு சில சமயம் பிடிக்கும், ஆனால் பொதுவா பிடிக்காது. ஒருவிதமான லவ் ஹேட் ரிலேஷன்ஷிப் போலத்தான். இருட்டுன்னா ஒரே பயம். ஹாரர் படங்களைத் தேடி போய் பார்க்கமாட்டேன். அதுல பிடிச்ச படம்னா ஓமன். தி ரிங் கூட ஓகே தான்.

சமீபத்தில் என்ன பொருள் வாங்கினீங்க?

ஸ்ருதி - என் ஊர் சென்னையில ஒரு விளக்கு வாங்கினேன்.

சமீபத்தில் உங்களுக்கு என்ன கிஃப்ட் கிடைச்சுது?

ஸ்ருதி - வாட்ச் வைக்கிறமாதிரி ஒரு கிஃப்ட் செட். ஆனால் நான் வாட்ச் பெரிசா விரும்பறதில்லை. ஆனா செமயா இருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு.

ஒவ்வொரு கேள்விக்கும் பளிச் பளிச்சென்று பதில் அளிக்கிறார் ஸ்ருதிஹாசன். அடுத்த இன்னிங்கிங்ஸுக்குத் தயாராகிவிட்ட ஸ்ருதியின் ரீ எண்ட்ரிக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com