டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அதர்வா பட போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்! 

'ஜெயம் கொண்டான்' திரைப்பட இயக்குனர் கண்ணனுடன் நடிகர் அதர்வா முதன்முறையாக இணையும் 'பூமராங்' பட போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:02 pm

DIN

சென்னை: 'ஜெயம் கொண்டான்' திரைப்பட இயக்குனர் கண்ணனுடன் நடிகர் அதர்வா முதன்முறையாக இணையும் 'பூமராங்' பட போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

'ஜெயம் கொண்டான்' திரைப்பட இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கவுள்ள படத்திற்கு 'பூமராங்' என்று பெயரிட்டுள்ளனர். 'பூமராங்' இப்படத்தில் மேகா ஆகாஷ், சுஹாசினி மணிரத்னம், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, உபன் படேல் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இயக்குநர் கண்ணனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'மசாலா பிக்ஸ்' மற்றும் எம்.கே.ஆர்.பி நிறுவனமும் இணைந்து இப்படத்தினை தயாரிகிறார்கள். இசையமைப்பாளராக 'அர்ஜுன் ரெட்டி' திரைப்பட இசையமைப்பாளர் ரதன், ஒளிப்பதிவாளராக பிரசன்னா, எடிட்டராக ஆர்.கே.செல்வா உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.  சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.