'கபாலி' படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'காலா'. 'கரிகாலன்' என்ற தலைப்பின் சுருக்கமே 'காலா'.
சென்னை மைலாப்பூரில் உள்ள knack studio-வில் 'இத்திரைப்படத்திற்கான தனது பகுதிகளுக்கான டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கினார்.
காலாவில் ரஜினியுடன் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷின்டே, அருள் தாஸ், ஹூமா குரேஷி, திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் தனுஷ் தயாரிபில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. மும்பையின் தாரவி பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் டானாக ரஜினி நடித்துள்ளார். விரைவான ஷெட்யூலில் தினமும் கிட்டத்தட்ட 10-லிருந்து 15 மணி நேரம் வரை படப்பிடிப்பு நடைப்பெற்றது. பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் பரபரப்பான நடைப்பெற்றது. தற்போது படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் ரஜினிகாந்த், தான் நடித்த பகுதிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கினார்
ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டாருடன் தாங்கள் எடுத்துக் கொண்ட படங்களை ஸ்டூடியோ கலைஞர்கள் வெளியிட, அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்

13.4.1976: அவசர நிலையை நீக்க பிரதமர் இந்திரா நிபந்தனை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


