/

நடிகர் சூர்யா திருப்பதி சென்றது இதற்குத்தான்!

சூர்யா சமூக அக்கறை கொண்ட ஒரு நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்

News image
Updated On :28 ஜனவரி 2018, 9:56 am

சூர்யா சமூக அக்கறை கொண்ட நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அண்மையில் தனது அலுவலகப் பணியாளர் முருகன் என்பவரின் திருமணத்தை திருப்பதியில் தன் சொந்த செலவில் நடத்தியுள்ளார்.

Story image

இத்திருமணத்திற்கு சிவகுமார், கார்த்தி, ஜோதிகா என தனது குடும்பத்துடன் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவகுமார் ஆசியுடன் மணமகனிடம் சூர்யா திருமாங்கல்யத்தை எடுத்துத் தர திருமண நிகழ்வு கோலகலமாக நடந்தது. தம்பதி சமேதராக சூர்யா ஜோதிகா மணமக்களை வாழ்த்தினார்கள். தங்களிடம் நீண்ட காலம் பணிபுரிந்த ஒருவர் மீதான தனது அன்பை வெளிப்படுத்திய சூர்யாவின் இச்செயல் அவரது ரசிகர்களை மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்துவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.