தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சூர்யா - கே.வி. ஆனந்த் படத்தில் இணைந்துள்ள ஆர்யா!

இப்படத்தில் ஆர்யாவும் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது...

News image
Updated On :4 ஜூலை 2018, 12:18 pm

எழில்

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைகிறார். இந்தப் படத்தில் மோகன் லாலும் நடிக்கவுள்ளார். மோகன்லால், கடைசியாக 2014-ல் ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். அதன்பிறகு இப்போதுதான் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷும் இணைந்துள்ளார். கெளரவம் படம் மூலமாகத் தமிழில் அறிமுகமான அல்லு சிரிஷ் நடிக்கும் இரண்டாவது தமிழ்ப்படம் இது. சூர்யாவின் ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகரான போமன் இராணி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லைக்கா தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், எழுத்து - பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவாளர் - கேவ்மிக் யு அரி, கலை - கிரண்.

அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யா - கே.வி. ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் இணைகிறார்கள். ஒரு படத்தின் தோல்விக்குப் பிறகு அப்படத்தின் நடிகர் - இயக்குநர் கூட்டணியை மீண்டும் காணமுடியாது. ஆனால் மாற்றான் படம் வெற்றியடையாவிட்டாலும் கே.வி.ஆனந்துடன் மீண்டும் இணைகிறார் சூர்யா.

அயன், மாற்றான் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். அதன்பிறகு மீண்டும் கே.வி. ஆனந்த் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ள கேவ்மிக் - ஜிகர்தண்டா, அம்மா கணக்கு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தில் ஆர்யாவும் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.