டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அதிக வருவாய் ஈட்டும் இந்திய நடிகர்கள் யார்?:  ஃபோர்ப்ஸ் டாப் 100 பட்டியல் வெளியீடு!

சர்வதேச அளவில் கடந்த ஓர் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது...

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:15 pm

தினமணி

சர்வதேச அளவில் கடந்த ஓர் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. அதில் இரு இந்திய நடிகர்கள் இடம்பிடித்துள்ளார்கள். 

விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள், நடிகர்கள் போன்றோர் இடம்பெற்றுள்ள இந்த ஃபோர்ப்ஸ் பட்டியலில் 50 வயது அக்‌ஷய் குமாரும் 52 வயது சல்மானும் இடம்பிடித்துள்ளார்கள். ரூ. 277 கோடி சம்பாதித்த அக்‌ஷய் குமாருக்கு 76-வது இடமும் ரூ. 258 கோடி சம்பாதித்த சல்மான் கானுக்கு 82-வது இடமும் கிடைத்துள்ளன. 

இந்தப் பட்டியலில் குத்துச்சண்டை வீரர் ஃபிளாய்ட் மேவெதர் ரூ. 1950 கோடி வருமானத்துடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். கால்பந்துப் பிரபலங்கள் மெஸ்ஸிக்கு 6-ம் இடமும் ரொனால்டோவுக்கு 10-ம் இடமும் நெய்மருக்கு 13-வது இடமும் கிடைத்துள்ளன. 

ஜுன் 1, 2017 முதல் ஜுன் 1, 2018 வரையிலான வருவாய் கணக்கிடப்பட்டுள்ளது. படச் சம்பளம் மற்றும் விளம்பர வருவாய் என ஒரு வருடத்தில் கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானத்தின் கணக்கீடு இது. இதேபோல கடந்த வருடம் வெளியிடப்பட்ட பட்டியலில் ஷாருக் கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார் ஆகிய மூன்று நடிகர்கள் இடம்பெற்றார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.