கடந்த 2015-ம் ஆண்டு, சென்னையில் ஐமேக்ஸ் திரையரங்கம் அறிமுகமானது.
சென்னை வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமாஸின் லூக்ஸ் திரையரங்குகளில், ஐமேக்ஸ் என்கிற விசேஷத் திரைப்படத் தொழில்நுட்ப வசதியுடன் ஒரு புதிய திரையரங்கம் செயல்பட ஆரம்பித்தது. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன், ஜேம்ஸ் பாண்ட் நடித்த ஸ்பெக்டர் படம் 2015, நவம்பர் 20 அன்று திரையிடப்பட்டது.
இந்நிலையில் சென்னைக்கு மற்றொரு ஐமேக்ஸ் திரையரங்கம் கிடைத்துள்ளது. வடபழனியில் உள்ள விஜயா ஃபாரம் மாலில் அமைந்துள்ள சத்யம் சினிமாஸின் பலாஸோ திரையரங்குகளில் ஒன்று, ஐமேக்ஸ் திரையரங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் பலாஸோ ஐமேக்ஸ் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. அதில் முதல் படமாக Ant-Man: And The Wasp திரையிடப்பட்டுள்ளது.
வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமாஸில் ஐமேக்ஸ் திரையரங்கில் டிக்கெட் விலை ரூ. 552. இந்நிலையில் சத்யம் சினிமாஸின் இந்த பலாஸோ ஐமேக்ஸ் திரையரங்கில் டிக்கெட் விலை ரூ. 300 மட்டுமே (3டி கண்ணாடி மற்றும் இணையக்கட்டணம் தனி. 3டி கண்ணாடி + இணையக் கட்டணத்துடன் ரூ. 360) இதனால் குறைந்த விலையில் ஐமேக்ஸ் திரையரங்கில் படங்கள் பார்க்கும் வாய்ப்பு சென்னை திரைப்பட ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.
சென்னை கோயம்பேட்டுக்கு அருகில் விஆர் மால் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதில் பிவிஆர் சினிமாஸின் திரையரங்குகள் உள்ளன. இதிலும் ஒரு ஐமேக்ஸ் திரையரங்கம் ஒன்று விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!

விஜய்யை விமர்சித்து படமா? டிஎன் 2026 இயக்குநர் விளக்கம்!

சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்

திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


