சூர்யா - கே.வி. ஆனந்த் படத்திலிருந்து விலகினார் பிரபல தெலுங்கு நடிகர்! காரணம் என்ன?
கெளரவம் படம் மூலமாகத் தமிழில் அறிமுகமான அல்லு சிரிஷின் இரண்டாவது தமிழ்ப்படமாக இது இருக்கும் என்று...


செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்தின் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மோகன் லாலும் நடிக்கிறார். மோகன்லால், கடைசியாக 2014-ல் ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். அதன்பிறகு இப்போதுதான் தமிழ் படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் ஜோடி - சாயிஷா. ஆர்யா, சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகரான போமன் இராணி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷும் முதலில் இணைந்தார். கெளரவம் படம் மூலமாகத் தமிழில் அறிமுகமான அல்லு சிரிஷின் இரண்டாவது தமிழ்ப்படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இந்தப் படத்திலிருந்து அல்லு சிரிஷ் விலகியுள்ளார். இதுகுறித்த காரணத்தை அறிக்கையாக அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
நான் நடித்து வரும் ஏபிசிடி படத்துடன் சூர்யா - கே.வி. ஆனந்த் படத்தின் தேதிகள் மோதுவதால் இந்தப் படத்திலிருந்து நான் விலகியுள்ளேன். நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புத் தேதிகளை மாற்றிக்கொள்ள முடியாத நிலைமை. இதனால் இரு படங்களின் நலனைக் கருத்தில் கொண்டு நானாக சூர்யா - கே.வி. ஆனந்த் படத்திலிருந்து விலகியுள்ளேன். என் நிலைமையைப் புரிந்துகொண்ட ஆனந்த் சார் இதற்கு ஒப்புக்கொண்டார்.
இந்தப் படத்தில் நடிப்பதற்கு நான் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அதை விட்டு விலகியுள்ளேன். வருங்காலத்தில் இந்தப் படக்குழுவினருடன் இணைந்து ஒரு படம் நடிப்பதில் ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...