பிரபல இயக்குநர் மணி ரத்னம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணி ரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பில் உருவாக்கப்பட்டு வரும் படம் - செக்கச் சிவந்த வானம். அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத்.
இந்நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மணி ரத்னம் இன்று அனுமதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. ராவணன் படத்தை இயக்கியபோது மணி ரத்னத்துக்கு முதல்முறையாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன்பிறகு ஓ காதல் கண்மணி படத்தை இயக்கியபோது மீண்டும் அதே நெஞ்சு வலியால் தில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அதே பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் மிகவும் கவலையடைந்தார்கள்.
இந்நிலையில் மணி ரத்னத்தின் செய்தித்தொடர்பாளர் நிகில் ட்விட்டரில் தெரிவித்ததாவது: வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு மணி ரத்னம் இன்று சென்றிருந்தார். அவர் நலமுடன் உள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆச்சரியப்படுத்தும் பேட்ரியாட் டிரைலர்!

உடைந்து விழுந்த ராட்டினம்! 10 பேர் கவலைக்கிடம்! | UP

சுந்தர். சியின் சொத்து விவரங்கள் வெளியீடு!

ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


