பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ், ஹோம்கம்மிங் என்கிற அமேஸான் பிரைம் தொடரில் நடித்து வருகிறார். 2014-ல் தி நார்மல் ஹார்ட்-டில் நடித்தபிறகு அவர் மீண்டும் சின்னத்திரைக்குத் திரும்பியுள்ளார்.
இதுபற்றி 50 வயது ஜூலியா ராபர்ட்ஸ் கூறியதாவது:
சின்னத்திரையில் நடிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்ததால் ஹோம்கம்மிங் தொடரை ஏற்றுக்கொள்ளவில்லை. சின்னத்திரை, வெள்ளித்திரை என்கிற பாகுபாடு பார்ப்பதில்லை. என் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி பெரிதாகவே இருக்கும்!
இரு ஊடகங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எண்ணவில்லை. வீட்டின் வரவேற்பறைக்குள் செல்வதை விரும்புகிறேன். உங்கள் வீடுகளுக்குப் பொழுதுபோக்கை நாங்கள் கொண்டுவருகிறோம் என்றார்.
ஹோம்கம்மிங், அமேஸான் பிரைம் செயலியில் நவம்பர் 2 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. சாம் இஸ்மாயில் இத்தொடரை இயக்கிவருகிறார். இதன் டீசரை அமேஸான் பிரைம் விடியோ வெளியிட்டுள்ளது.
வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாகப் படம் பார்க்க வசதியை ஏற்படுத்தித் தருகிறது அமேஸான் பிரைம் விடியோ செயலி. இதற்கென தனிக்கட்டணங்கள் உண்டு. டெஸ்க்டாப் கணினி, ஸ்மார்ட்போன், டேப்ளெட் பிசி போன்றவற்றில் அமேஸான் பிரைம் செயலியில் வெளியாகும் விடியோக்களைப் பார்க்கமுடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


