தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்த வாரம், ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன! (போஸ்டர்கள் இணைப்பு)

ஒரே நாளில் 10 படங்கள் வெளியாவதற்கு அனுமதித்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீதும் விமரிசனங்கள் எழுந்துள்ளன.

News image
Updated On :31 ஜூலை 2018, 9:18 am

எழில்

அடுத்த வாரம் ஆகஸ்ட் 10 அன்று கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படம் வெளியாகிறது. இதனால் இதனுடன் போட்டியிடுவதிலிருந்து தப்பிக்கொள்ள, ஒட்டுமொத்தமாக 10 தமிழ்ப்படங்கள் இந்த வாரம் வெள்ளியன்று (ஆகஸ்ட் 3) வெளியாகின்றன.

1. கஜினிகாந்த் 2. மணியார் குடும்பம் 3. அரளி 4. கடிகார மனிதர்கள் 5. எங்க காட்டுல மழை 6. போயா 7. உப்பு புளி காரம் 8. காட்டு பய சார் இந்த காளி 9. கடல் குதிரைகள் 10. நாடோடி கனவு.

ஆர்யா, சயீஷா நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - கஜினிகாந்த். ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - பாலமுரளி பாலு. ஹரஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இதற்கு முன்பு இயக்கியுள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்தப் படமும் தம்பி ராமையா இயக்கியுள்ள மணியார் குடும்பம் என இரு படங்கள் மட்டுமே ஓரளவு ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தவை. இந்நிலையில் மற்ற படங்கள் திரையரங்குகள், வசூல் கிடைப்பதில் பல சிரமங்களைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஒரே நாளில் 10 படங்கள் வெளியாவதற்கு அனுமதித்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீதும் விமரிசனங்கள் எழுந்துள்ளன.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.