சுசீந்திரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் மிருணாளினி!
சுசீந்திரன் இயக்கும் சாம்பியன் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் மிருணாளினி...


டப்ஸ்மேஷ் என்பது சினிமா வசனங்கள், பாடல்களை அதேபோல நடித்துக்காட்டும் வீடியோ வடிவிலான தொகுப்பாகும். அதில் ஈடுபட்டு புகழ்பெற்றவர்களில் முதன்மையானவர், பெங்களூரைச் சேர்ந்த மிருணாளினி. அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் தவிர்த்து வந்தவர், பிறகு நடிக்க சம்மதித்து தற்போது இரு படங்களில் நடித்து வருகிறார்.
ஆரண்ய காண்டம் புகழ் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார் மிருணாளினி. இதில் அவருக்குச் சிறிய வேடம்தான். இந்நிலையில் சுசீந்திரன் இயக்கும் சாம்பியன் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் மிருணாளினி. இது அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் படம்.
வெண்ணிலா கபடி குழு, ஜீவா போன்ற விளையாட்டை மையமாக கொண்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது, சாம்பியன் என்கிற கால்பந்தை மையமாகக் கொண்ட படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.கே. ரெட்டி, அஞ்சாதே நரேன், ஆர்.கே. சுரேஷ், ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன் போன்றோர் நடிக்கிறார்கள்.
அரோல் கொரேலி இசையில், சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படம் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயனின் ஆலோசனையின்படி உருவாகவுள்ளது. சாம்பியன் படம் டிசம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...