

கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து சாமி 2 படம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா. பிரபு, சூரி போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத்.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து படத்தின் பஞ்ச் வசனங்களைக் கேலி செய்து டிரெய்லரைப் பலரும் விமரிசனம் செய்திருந்தார்கள். எனினும் யூடியூபில் இப்பட டிரெய்லருக்குக் கிட்டத்தட்ட 60 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. இதனால் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் பட டிரெய்லர் மீதான விமரிசனங்கள் குறித்து சாமி 2 படத் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் ட்விட்டரில் கூறியதாவது: உண்மையான திரைப்பட பார்வையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்குகளின் உண்மையான எதிர்வினை இதுதான். அவர்களுக்கு இது பொழுதுபோக்கு மட்டுமே. அது ஹாலிவுட்டாக இருந்தாலும் உள்ளூர் மொழிப் படங்களாக இருந்தாலும். அதேசமயம் ஒவ்வொரு விமரிசனங்களையும் மதிக்கவேண்டும். இன்னும் மேலான தரத்துக்குச் செல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.