பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் - கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி.
இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரித்துள்ளார். சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் போன்றோர் நடித்துள்ளார்கள். தெலுங்கிலும் வெளியாகும் இந்தப் படத்துக்கு சின்னபாபு என்று பெயரிடப்படுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன.
இந்த விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது:
இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் நாளாக இருக்கும். ஏனென்றால் என் பிள்ளைகளின் மாமனான சத்யராஜை வைத்து எங்கள் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. அதில் கார்த்தியுடன் அவர் நடித்துள்ளார். சத்யராஜ் ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர். அப்படி இருந்தும் அவர் சென்னைக்கு வந்து ரத்தம் சிந்தி கடுமையாக உழைத்து முன்னேறியுள்ளார். ஜமீன் பரம்பரையிலிருந்து வந்து கடுமையாக உழைத்து முன்னேறிய முதல் நபர் சத்யராஜ்தான். சத்யராஜ் காலகட்டத்தில் வந்த நடிகர்களில், அவர் மட்டும் தான் இன்னும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவுக்கும் கார்த்திக்கும் சத்யராஜ் தன்னுடைய முதல் சம்பளத்தில் இனிப்பு வாங்கித் தந்தார். அவரை வைத்து இன்று சூர்யா படம் தயாரிக்கிறார். அதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். நிஜமாக இன்றுதான் வாழ்கையில் எனக்கு சந்தோஷமான நாள். இதைவிட எனக்கு மகிழ்ச்சியான நாள் இருக்கமுடியாது என்றார்.
பாடல்களின் இணைப்பு:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...





