மலையாள நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது!

பல தமிழ் படங்களில் வில்லனாகவும், மலையாள திரைப்படங்களில் கதாநாயகனாகவும் விளங்கிய தென்னிந்தியாவில்
மலையாள நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது!
Published on
Updated on
1 min read

பல தமிழ் படங்களில் வில்லனாகவும், மலையாள திரைப்படங்களில் கதாநாயகனாகவும் விளங்கிய தென்னிந்தியாவில் பிரபலமான நடிகர் கலாபவன் மணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 6-ம் தேதி திடீரென உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கலாபவன் மணியின் சகோதரரும், மனைவியும் புகாரளித்தனர்.

 இது தொடர்பாக நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது உடலில் நச்சு கலந்திருந்தது கண்டறியப்பட்டது.  இச்செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.
 
கலாபவன் மணியின் சொந்த ஊர் கேரளத்திலுள்ள சாலக்குடி. மல்லுவுட்டில் நடிக்கவரும் முன்பு ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். மலையாள இயக்குநர் வினயன்  கலாபவன் மணியின் வாழ்க்கையை மையமாக வைத்து 'சாலக்குடிக்காரன் சங்கதி' என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். கலாபவன் மணியை வைத்து இண்டிபெண்டன்ஸ், வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் உள்ளிட்ட 13 படங்கள் இயக்கியுள்ளவர் வினயன் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாமணி என்பவர் கலாபவன் மணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறது இயக்குநர் தரப்பு.

கலாபவன் மணி தமிழில் நடித்த பல படங்கள் மறக்க முடியாது என்றாலும் விக்ரம் ஹீரோவாக நடித்த ‘ஜெமினி’ படத்தில் வித்யாசமான வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஒரு பவர்ஃபுல் வில்லனாக தென்னிந்திய ஹீரோக்களின் நடிப்பு உரம் கொடுத்துக் கொண்டிருந்த கலாபவன் மணியின் மரணத்தின் மர்மம் புதிராக இருந்து வருவதை தொடர்ந்து இந்தப் படம் உருவாக்கப் படவிருப்பதால் சில வெளிச்சங்கள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com