கபாலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கரிகாலன்' என்கிற 'காலா'. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷின்டே, அருள் தாஸ், ஹூமா குரேஷி, திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் பிப்ரவரி 10-ந் தேதி ட்வீட் செய்தார். இச்செய்தி ரஜினி ரசிகர்களிடம் உற்சாகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், காலா டீஸரை தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார். அதில், 'வேங்கை மகன் ஒத்தைல நிக்கேன், தில் இருந்தா மொத்தமா வாங்க லே!!!' என்கிற பஞ்ச் டயலாக் பேசியுள்ளார் ரஜினி. மும்பை தாராவியில் வாழும் நெல்லைத் தமிழராக நடித்துள்ள ரஜினிகாந்த் நெல்லைத் தமிழில் பேசி அசத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


