நயன்தாரா நடிக்கும் கோகோ: இயக்குநர் விக்னேஷ் சிவன் பாராட்டு!
இன்னொரு சிறப்பான படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவுக்குப் பாராட்டுகள். இசையில் மேஜிக் நிகழ்த்தும்...


லைக்கா நிறுவனம் தயாரிக்கும் கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்குகிறார். இசை - அனிருத்.
இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.
போஸ்டர் வெளியான பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன், இயக்குநர் நெல்சனைக் குறிப்பிட்டு ட்வீட் செய்ததாவது: சரியான சமயத்தில் உனக்கான உயரத்தை அடைவாய் நண்பா. கோலமாவு கோகிலா படம் பற்றிய அனைத்தும் தனித்துவமாக உள்ளன. இன்னொரு சிறப்பான படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவுக்குப் பாராட்டுகள். இசையில் மேஜிக் நிகழ்த்தும் அனிருத்துக்கு நன்றிகள் என்று ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...