3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள மெர்குரி பட டீசர் வெளியீடு!

ஏப்ரல் 13 அன்று மெர்குரி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

News image
Updated On :7 மார்ச் 2018, 10:59 am

எழில்

இறைவி படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் - மெர்குரி. 

பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சனந்த், இந்துஜா (மேயாத மான் படத்தில் நடித்தவர்) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார். ஒளிப்பதிவு - திரு.

கமலின் பேசும் படம் போல மெர்குரியும் ஒரு மெளனப் படமாகும். SILENCE IS THE MOST POWERFUL SCREAM என்று இந்தப் படத்தின் விளம்பர வாசகம் கூறுகிறது. வசனமே இல்லாத இந்தப் படத்துக்கு பின்னணி இசை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் வெளியாகவுள்ளது. ஏப்ரல் 13 அன்று மெர்குரி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை சமூகவலைத்தளங்களில் தனுஷ், நிவின் பாலி, ராணா டகுபதி, ரக்‌ஷித் ஷெட்டி ஆகிய நால்வரும் வெளியிட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.