கடந்த வாரம் வெளியான ரஜினி நடித்த 'காலா' டீஸர் வெளியான நாளிலிருந்தே யுடியூபில் முதலிடத்தில் இருந்து வந்தது. ரஜினி ரசிகர்கள் இந்த டீஸரைப் பற்றிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வைரலாக்கினர்.
ஆனால், அண்மையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள 'பரத் அனி நேனு' படத்தின் டீசர் வெளியானது. வெளிவந்த ஒரே நாளில் 80 லட்சம் பார்வைகளைக் கடந்தும், 2 லட்சத்து 60 ஆயிரம் லைக்குகளைப் பெற்றுவிட்டது இந்த டீஸர். மேலும் இது 'காலா' முதல் நாள் டிரென்டிங்கில் இரண்டாம் இடத்திற்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்துவிட்டது. இது முதல் நாள் கணிப்பு தான், வரும் நாட்களில் இந்த டீஸரின் பார்வையாளர்கள் அதிகரிப்பார்களா என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ரஜினிகாந்த் பட டீஸரை பின்னுக்குத் தள்ளி மகேஷ் பாபு டீஸர் முதலிடம் பிடித்திருப்பதை டோலிவுட் திரையுலகம் மகிழ்ந்துள்ளது. ஆனால் ரஜினிகாந்தின் காலா டீஸர், 2.0 டீஸர் லீக், அவரின் அண்மை அரசியல் பேச்சு என ட்ரெண்டிங்கில் ரஜினிகாந்த் தான் எப்போதும் முன்னணியில் இருக்கிறார். இது வரை காலா டீஸருக்கு 1 கோடியே 80 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், 4 லட்சத்து 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


