அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் ரோபோ சங்கர்!
அஜித் - சிவா மீண்டும் இணையும் விசுவாசம் படத்தில் நடிக்க நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்...


அஜித் - சிவா மீண்டும் இணையும் விசுவாசம் படத்தில் நடிக்க நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். தீபாவளியன்று படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கிவருகிறார்.
சிவா இயக்கிய வீரம் படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விசுவாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித்.
இதற்கு முன்பு சிவாவின் இயக்கத்தில் நடித்த மூன்று படங்களும் நல்ல வசூலை அடைந்ததால் மீண்டும் அவருக்கு வாய்ப்பளித்துள்ளார் அஜித். விசுவாசம் படமும் வெற்றியடைந்தால் ஐந்தாவது முறையாக அஜித் - சிவா இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இப்படத்தில் நடிக்க நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஒப்பந்தமான நிலையில் தற்போது மற்றொரு நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கரும் ஒப்பந்தமாகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...