சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்த ஹிந்தி நடிகர்!

நேற்றுகூட அவர் நன்றாகத்தான் இருந்தார். இன்று காலை 4 மணிக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறினார்...

News image
Updated On :14 மார்ச் 2018, 10:12 am

எழில்

பாலிவுட் நடிகர் நரேந்திர ஜா இன்று காலமானார். அவருக்கு வயது 55.

மஹாராஷ்டிராவின் நானேகோனில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்த நரேந்திரா ஜா, இன்று காலை காலமானார். இதுகுறித்து அவருடைய கார் ஓட்டுநர் லக்‌ஷ்மண் சிங் கூறியதாவது: அவருக்கு உடல்நலக் குறைவு என எதுவும் ஏற்படவில்லை. நேற்றுகூட அவர் நன்றாகத்தான் இருந்தார். இன்று காலை 4 மணிக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவருடைய உயிர் பிரிந்தது என்று கூறியுள்ளார். 

ஹைதர், ரயீஸ், மொகஞ்சதாரோ, காபில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற படங்களில் நடித்துள்ள நநேந்திர ஜா, தற்போது சல்மான் கானின் ரேஸ் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இவருடைய மனைவி பங்கஜா தாக்குர், மத்திய தணிக்கைக் குழுவின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.