கார் பரிசளித்த சூர்யா: இயக்குநர் விக்னேஷ் சிவன் உருக்கம்!
என்னைப் போன்ற புதிய இயக்குநரை உற்சாகப்படுத்த பரந்த மனது வேண்டும். இந்த அன்புக்குத் தகுதியுடையவனா என்று...


சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் - தானா சேர்ந்த கூட்டம். சமீபத்தில் வெளியான இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படம் உருவான விதம் மற்றும் வசூல் போன்றவற்றால் திருப்திக்குள்ளான சூர்யா, இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு டொயோட்டா கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் விக்னேஷ் சிவன் கூறியதாவது: யார் என்ன சொன்னாலும் அன்பாகவே இருப்போம். எல்லையில்லா அன்பை வெளிப்படுத்தியுள்ள சூர்யா சாருக்கு நன்றிகள். என்னைப் போன்ற புதிய இயக்குநரை உற்சாகப்படுத்த பரந்த மனது வேண்டும். இந்த அன்புக்குத் தகுதியுடையவனா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு வாய்ப்பு அளித்ததற்கும் இந்தத் தருணத்துக்கும் மிக்க நன்றி என்று உருக்கமாகப் பதிவு எழுதியுள்ளார்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...