காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிவகார்த்திகேயனோடு அடுத்து கைகோர்க்கப் போகும் இயக்குநர் யார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தினை 'சிவா மனசுல சக்தி' திரைப்பட இயக்குனர் ராஜேஷ் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :19 மார்ச் 2018, 12:18 pm

DIN

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தினை 'சிவா மனசுல சக்தி' திரைப்பட இயக்குனர் ராஜேஷ் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

'சிவா மனசுல சக்தி' திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானவர் இயக்குனர் ராஜேஷ். இவர் 'பாஸ் என்கிற பாஸ்கரன்', ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இவர் இயக்கிய 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் அவ்வளவு நன்றாகப்  போகவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் சந்தானத்தினை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தினை இயக்கப் போவதாக பேசப்பட்டது.   

ஆனால் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தினை ராஜேஷ் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மூவரும் விரைவில் சந்திக்க உள்ளதாகவும் தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இது தொடர்பாக ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு இயக்குனர் ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இது குறித்து இப்போதைக்கு எந்த தகவலையும் நான் கூற இயலாது. ஆனால் உண்மைதான்; இது தொடர்பாக நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். கதை முழுவதாக தயாராகி விட்டது. மற்ற விஷயங்களை திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த வாரத்தில் முறையான அறிவிப்பு வெளிவரும்.

குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பிடித்த நாயகனாக சிவகார்த்திகேயன் இருப்பதால் இந்தப் படமானது குடும்பத்துடன் வந்து பார்க்கும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும்.

இந்த படம் முடிந்தவுடன் சந்தானத்துடன் நான் இயக்கவுள்ள படம் துவங்கும். இதுவும் அதுவும் வேறு வேறு கதை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.