சென்னை: ரஜினிகாந்த்தின் 'காலா' திரைப்படத்தின் 'செம்ம வெயிட்டு' பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள படத்தின் அனைத்து பாடல்களும் மே 9-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், செம்ம வெயிட்டு என்கிற ஒரு பாடல் மட்டும் நாளை இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என்று திங்களன்று தகவல் வெளியானது.
இந்நிலையில் ரஜினிகாந்த்தின் 'காலா' திரைப்படத்தின் 'செம்ம வெயிட்டு' பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
அருண்ராஜா காமராஜ் மற்றும் டோபேடெலிக்ஸ் ஆகிய இருவரும் தமிழ் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். பாடலில் ராப் இசை மற்றும் இந்தி பாடல் வரிகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றை டோபேடெலிக்ஸ் குழுவினர் எழுதியுள்ளனர்.
இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் ஹரிஹர சுதன் இணைந்து பாடியுள்ளனர்.
பாடலுக்கு ரசிகர்களிடம் என்ன வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதி கைது! காவல் வாகனத்தில் தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்!

ஆடிப்பெருக்கு: மகாதானபுரம் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!
உதயநிதி கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் முழக்கம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



