பிரபல மலையாள டி.வி தொகுப்பாளினி விபத்தில் மரணம்!

பிரபல மலையாள டி.வி தொகுப்பாளினியும், செய்தி வாசிப்பாளருமான சூர்யா வாசன் நேற்று கோட்டயத்தில் விபத்தில் மரணமடைந்தார்.
பிரபல மலையாள டி.வி தொகுப்பாளினி விபத்தில் மரணம்!
Published on
Updated on
1 min read

பிரபல மலையாள டி.வி தொகுப்பாளினியும், செய்தி வாசிப்பாளருமான சூர்யா வாசன் நேற்று கோட்டயத்தில் விபத்தில் மரணமடைந்தார். கோட்டயத்தில், சூர்யா தனது சகோதரர் அனந்தபத்மநாபனுடன் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது எதிர்பாராத விதமாக வேன் ஒன்றால் மோதப்பட்டு நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு விரைந்த போதும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.

கேரள காவல்துறையினர் விபத்துக்குக் காரணமான வேன் ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. மரணமடைந்த சூர்யாவுக்கு இன்னும் திருமணமாகியிருக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் அவரது தந்தை காலமாகியிருந்தார். மலையாள டி.வி சேனல் வட்டாரங்கள் மிகவும் பிரபலமான சூர்யாவாசனின் மறைவு அங்கிருக்கும் டி.வி பிரபலங்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சூர்யா வாசனின் மறைவுக்காகத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com