நேற்று (மே 15) இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய் ஒரு பிரத்யேமான பரிசை அளித்துள்ளார். அதில் அவர் ‘அன்புடன் விஜய்’ என்று கையெழுத்து போட்டு சந்தோஷுக்கு அனுப்பியுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். முதல் படத்திலேயே உடனடி கவனம் பெற்றார் சந்தோஷ். அதனைத் தொடர்ந்து, 'சூது கவ்வும்', 'குக்கூ', 'ஜிகர்தண்டா', 'மெட்ராஸ்', ஆகிய படங்களையும் 'கபாலி', 'காலா’ ஆகிய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படப் படங்களுக்கு இசையமைத்து மக்கள் மனத்தை கொள்ளை கொண்டார்.

தனது பிறந்த தினமான நேற்று, மனைவியுடன் ரஜினியிடம் ஆசி பெற்றார் சந்தோஷ். ‘இந்த தினத்தின் காலை எனக்கு மிகவும் முக்கியமானது, எனது காலாவைச் சந்தித்தேன்’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார் சந்தோஷ்.

விஜய் நடித்த 'பைரவா' படத்திற்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். ‘வரலாம் வரலாம் வா...’, என்ற தீவிரமான பாடல் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துவிட்டது. இருவருக்கும் நல்ல நட்பு உண்டு. சந்தோஷின் பிறந்த நாளுக்கு விஜய் சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். அதுவொரு கிரிக்கெட் பேட் . 'ச' 'நா' என்று எழுதப்பட்டிருந்த அந்த க்ரிக்கெட் பேட் சந்தோஷ் நாராயணனுக்காக விஜய் பிரத்யேகமாக வடிவமைத்தது. பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா என்று பதிவிட்டு, அன்புடன் விஜய் என்று தனது கையெழுத்தை போட்டுத் தந்துள்ளார்.
'எனக்காக சிறப்பு பரிசு தயாரித்து கொடுத்த எனதன்பு விஜய் அண்ணாவுக்கு நன்றி. இது என் வாழ்நாளில் மறக்க முடியாத பரிசாக இருக்கும் ’ என்று சந்தோஷ் நாராயணன் தனதுட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணனுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் அவரது ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


