17 வருடங்கள் கழித்து 2-வது படத்தை இயக்கிய விஜய் பட இயக்குநர்!
நான் உணரும்போது மிகவும் தாமதமாகிவிட்டது, அதன் பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது...


விஜய் நடித்த ஷாஜஹான் படம் குறித்து ஞாபகம் இருக்கிறதா? தேன் சொட்டும் பாடல்களையும் விஜய் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும் இறுதிக்காட்சியையும் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாதுதானே!
அந்தப் படத்தை இயக்கியவர் ரபி அப்புலு. 2001-ல் ஷாஜஹானை இயக்கிய பிறகு, 17 வருடங்கள் கழித்து இப்போதுதான் அவருடைய அடுத்தப் படம் வெளியாகியுள்ளது. புதுமுகம் ராஜன் தேஜேஸ்வர் நடிப்பில் ரவி இயக்கிய செயல் படம் கடந்த வாரம் வெளியானது.
17 வருடங்கள் இடைவெளி ஏன்? இதற்கு அவரே பதில் சொல்கிறார்:
நான் செய்த பெரிய தவறு - பெரிய பட்ஜெட் கொண்ட படத்துக்காகக் காத்திருந்ததுதான். பதிலாக, இரண்டாம் நிலை கதாநாயகர்கள் நடிக்கக்கூடிய படங்களை இயக்கியிருக்க வேண்டும். இதற்கு மேலும் தேர்வு செய்து படம் பண்ணுவது சரியல்ல என்று நான் உணரும்போது மிகவும் தாமதமாகிவிட்டது, அதன் பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
செயல் படத்துக்காகக் கிடைத்த பாராட்டுகள் என்னை தற்போது ஊக்கப்படுத்தியுள்ளது. அடுத்ததாக வலிமை என்றொரு படத்தை இயக்கவுள்ளேன். அதற்காகத் தயாரிப்பாளரைத் தேடி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...