நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா சபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன், உள்ளிட்ட பலர் நடித்த மலையாளத் திரைப்படம், 'பிரேமம்’ தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டு இன்றுடன் மூன்றாண்டுகள் ஆகிவிட்டது.
இத்திரைப்படம் எப்படி மொழி கடந்து அதிகளவு ரசிகர்களுக்குப் பிடித்துப் போய்விட்டது என்பது ஒரு உளவியல் சார்ந்த விஷயம். ஆட்டோகிராஃப், பிரேமம் போன்ற படங்கள் மனிதர்களின் ஆன்மாவைத் தொட்டுப் உரசிப் பார்க்க வல்லது, பால்யத்தை, பதின் வயதைத் திரும்பிப் பார்கச் செய்வது, பழைய விஷயங்களை அசை போடும் போது கிடைக்கும் நினைவுகளின் திரட்சியை அணுகிப் பார்ப்பது, இளமையெனும் பருவத்தையும், மறக்க முடியாத வாழ்பானுபவங்களையும் கிளர்ந்தெழச் செய்வது.
பொக்கிஷமாக பொத்தி வைத்திருந்த நெஞ்சை தொட்ட காதல் அனுபவங்கள், உயிர் வரை ஊடுருவிச் சென்ற நேசங்கள் என வாழ்க்கையை காதல் மட்டுமே அழகாக்குகிறது. இவ்வுலகிற்கு அழியா காவியங்களாகவும், கவிதைகளாகவும் ஓவியமாகவும் உறைந்திருப்பது காதல் எனும் ஆதியுணர்வு மட்டுமே. அதை மையமாக வைத்து, அழகியலுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் பிரேமம் ரசிகர்களின் மனத்தை கவர்ந்திருப்பது அதிசயமொன்றுமில்லையே? சில படங்களை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. மீண்டும் மீண்டும் சில காட்சிகள் அல்லது பாடல் வரிகள் நம் நினைவுத் திரைகளில் ஓடிக் கொண்டே இருக்கும். அவ்வகையில் பிரேமம் திரைப்படம் சலிக்காத காட்சிகள் உடைய மனத்துக்குள்ளே அழியாத ஒரு கோலம் எனலாம்.
இந்தப் படத்துக்குப் பிறகு நடிகர் நிவின் பாலியின் திரையுலகப் பயணத்தில் ஏற்றம் மட்டுமே. இன்று தனது ட்விட்டரில் நிவின் பாலி பிரேமம் மூன்று ஆண்டுகள் என படத்தின் போஸ்டரும் பதிவிட்டுள்ளார்.
நிவின் பாலியின் ட்வீட்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


