சென்னை: விஸ்வாஸம் படப்பிடிப்பில் டான்சர் ஒருவர் திடீர் என மரணமடைய, அவரது உடலை பாதுகாப்பாக கொண்டு வர நடிகர் அஜித் உதவியுள்ளார்.
இயக்குநர் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடித்த வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, 'விஸ்வாசம்' என்னும் படத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
படத்தின் டாக்கீ பகுதிகள் அநேகமாக முடிவடைந்திருக்கும் நிலையில் ஒரு பாடல் மட்டுமே மிச்சமிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பாடலின் படப்பிடிப்பானது, மஹாராஷ்டிரா மாவட்டம் புனேவில்நடைபெற்று வருகிறது
இந்தப் பாடலின் படப்பிடிப்பின் போது அஜித்துடன் சரவணன் (42) என்னும் குழு நடனக்கலைஞரும் நடனம் ஆடினார். படபிபிடிப்பின் போது சரவணன் திடீரென வாந்தி எடுத்து மயக்கமானார். இதையடுத்து அவரை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து உடனடியாகத் தான் தங்கியிருந்த இடத்தில இருந்து மருத்துவமனைக்கு அஜித் வந்துள்ளார். அத்துடன் நில்லாமல் சரவணனது உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் வரை இரவு முழுவதும் உடன் இருந்திருக்கிறார்.
அத்துடன் விமானத்தில் உடலைக் கொண்டு செல்வதற்கான தொகையான ரூ. 8 லட்சத்தையும் அவரே செலுத்தியுள்ளார். இதன் காரணமாக சரவணன் உடலானது விரைவாக சைதாப்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சைதாப்பேட்டையில் நடைபெற்ற இறுதிச் சடங்கிலும் அஜித் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித்தின் இந்த நடவடிக்கையினை திரையுலகம் வெகுவாகப் பாராட்டி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பழனியில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் வரும்

தோ்தல் நடத்தை விதிகளால் குறைதீா் கூட்டங்கள் ரத்து

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று அனைத்துக் கட்சிகளின் கூட்டம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

