சசிகுமார் - மடோனா நடிக்கும் கொம்புவச்ச சிங்கம்டா படப்பிடிப்பு தொடங்கியது!
சசிகுமாரை வைத்து ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் இந்தப் படத்தை இயக்குகிறார்...


‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களைத் தயாரித்த இந்தர்குமாரின் ‘REDHAN’ நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படம் - ‘கொம்புவச்ச சிங்கம்டா’
சசிகுமாரை வைத்து ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
1990-1994 காலக்கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சசிகுமார் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குநர் மகேந்திரன் போன்றோரும் நடிக்கிறார்கள். இசை - நைனன் தாமஸ். ஒளிப்பதிவு - ஏகாம்பரம்.
காரைக்குடியில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி கிளாப் அடித்து தொடங்கிவைத்துள்ளார். பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர், குற்றாலம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...