ஜப்பானில் மீண்டும் ரிலீஸ் ஆகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து!

1995-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் முத்து.
ஜப்பானில் மீண்டும் ரிலீஸ் ஆகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து!
Published on
Updated on
1 min read

1995-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் முத்து. வெளியான சமயத்திலிருந்து இன்று வரை ரசிகர்களின் பாராட்டினை அதிகம் பெற்ற திரைப்படம் இது. தற்போது இத்திரைப்படத்தின் ஜப்பானிய பதிப்பான 'முத்து டான்சிங் மஹாராஜா என்ற பெயரில், நவீன தொழில்நுட்ப வசதியுடன்  டிசம்பர் மாதத்தில் ஜப்பானில் மீண்டும் வெளியாகவிருக்கிறது. உலகம் முழுவதும் டிசம்பர் 29-ம் தேதி 2.0 வெளியாகவிருக்கும் சமயத்தில், அதற்கு முன்னதாக 23-ம் தேதியே முத்து படம் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

ஜப்பானில் உள்ள ரஜினி ரசிகர்கள் முத்து உள்ளிட்ட ரஜினி படங்களைப் பார்க்க பல சமயம் இந்தியாவிற்கு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜப்பானில் ரஜினிக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து ஜப்பானின் திரையரங்குகளில் ரஜினி படங்கள் திரையிடப்பட்டன. குறிப்பாக முத்து திரைப்படம் ஜப்பானில் சூப்பர் ஹிட் ஆகியது. அதன் பின் ரஜினிக்கு ஜப்பானில் அதிகளவு ரசிகர்கள் உருவாகினர். மொழி தெரியாவிட்டாலும் சப் டைட்டில் மூலம் இத்திரைப்படத்தை வெகுவாக ரசித்தனர். இன்னும் சில ரசிகர்கள் ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்து, சூப்பர் ஸ்டாரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்கள் அன்பினை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வுகளால் ரஜினி நெகிழ்ந்து அச்சமயத்தில் ஊடகங்களில் பேட்டி தந்துள்ளார். டோக்கியோவில் ரஜினிக்கு ரசிகர் மன்றம் ஒன்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முத்து திரைப்பட வெற்றியை ஜப்பானிய மீடியாக்கள் வெளியிட்டு இத்திரைப்படத்துக்கு மேலும் பெருமை சேர்த்தன. அதில் குறிப்பிட்டிருந்தது : 23 வாரங்கள் ஒரே அரங்கில் ஓடி, 208 மில்லியன் யென்களை முத்து சம்பாதித்தது என்கிறது மேலதிகத் தகவல்கள். 100 திரையரங்குகளுக்கு விரிவாக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 400 மில்லியன் யென்களையும் முத்து சம்பாதித்தது. இந்த சாதனையை நினைவுகூர்ந்து இளம் தலைமுறையினரின் விருப்பத்திற்காகவும் சேர்த்து தற்போது ஜப்பானில் முத்து மீண்டும் வெளியாகவிருக்கிறது. 

இப்படத்தின் ரீ ரீலீஸுக்காக சூப்பர் ஸ்டார் ஒரு புரோமோ விடியோவை அனுப்பியிருக்கிறார். இது ஜப்பான் தொலைக்காட்சியில் வெளியாகும். இந்த காணொலியில் ரசிகர்கள் படத்தை பார்த்து வரவேற்க வேண்டும் என்று ரஜினி பேசியுள்ளார். இந்த விடியோ படத்தின் காட்சி தொடங்குவதற்கு முன்பாக ஒளிபரப்பாகும். இது ரஜினி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com