

ஹாலிவுட் ஹீரோக்களில் உலகப் புகழ்ப் பெற்றவர் ராபர்ட் டி நீரோ. 'காட் ஃபாதர்', ஸ்கார்ஃபேஸ்', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா', ' 'ஏஞ்சல் ஹார்ட்' ‘விஸார்ட் ஆஃப் லைஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1997-ம் ஆண்டு கிரேஸ் ஹைடவர் என்பவரைக் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகக் காதலித்து மணந்தார் ராபர்ட் டி நீரோ. அச்சமயத்தில் அவருக்கு இரண்டு முறை விவாகரத்தாகியிருந்தது. டயானே அபோட் என்பவருடன் மணமாகி விவாகரத்தானது. அவர்களுக்கு ட்ரேனா (47) என்ற மகளும் ரபேல் (42) என்ற மகனும் உள்ளார்கள். டயானேவுடனான விவாகரத்திற்குப் பின், டூகி ஸ்மித் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார் ராபர்ட் டி நீரோ. இந்த ஜோடிக்கு 23 வயதான ஜூலியன் - ஆரோன் என்ற இரட்டையரான மகன்கள் உள்ளனர். மூன்றாவது மனைவியாகத்தான் கிரேஸை மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு எல்லியட் என்ற மகனும் ஹெலன் கிரேஸ் என்ற மகளும் உள்ளனர்.
தற்போது நீரோவுக்கு வயது 75, கிரேஸுக்கு 63. அண்மையில் இந்த ஜோடி பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை என்று மீடியாக்கள் தெரிவித்தன. அவர்கள் விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்ற செய்தியையும் ஹாலிவுட் ஊடகங்கள் வெளியிட்டது. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து ராபர்ட் டி நீரோ கிரேஸை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். ஆனால் அப்போது சமாதானம் அடைந்து தொடர்ந்து வாழ முடிவெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.