விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படம் தீபாவளிக்கு வெளியானது. அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருள்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், படத்தின் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயரை கோமள வல்லி என்று குறிப்பிட்டுள்ளது போன்ற காட்சிகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சனம் செய்யும் விதமாக அமைத்திருப்பதாகவும் பெரும் சர்ச்சை உருவானது. இதனால் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சில திரையரங்குகளில் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டில் படம் வெளியான இரு நாள்கள் கழித்து காவலர்கள் குவிக்கப்பட்டார்கள். அன்றைய நாளின் நள்ளிரவுக்குப் பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அவரது பாதுகாப்புக்காகவே காவலர்கள் அவரது வீட்டில் குவிக்கப்பட்டதாகக் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, சர்கார் சர்ச்சை தொடர்பாக அப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரைக் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அரசின் நலத்திட்டங்களை சர்கார் படத்தில் விமரிசித்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், அரசையோ அரசின் நலத்திட்டங்களையோ விமரிசிக்க மாட்டேன் என உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசின் கோரிக்கை குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விளக்கமளிக்க உத்தரவிட்டு, முன்ஜாமீன் வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2030-31க்குள் 8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!

மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு!

எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

கேரளம்: அரசு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பெண்கள் கைது
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


