தனது 10-ம் வகுப்புப் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி: அடையாளம் தெரியாமல் ரசிகர்கள் திண்டாட்டம்!
இவர்களில் யார் விஜய் சேதுபதி என உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?


விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. இந்தப் படம் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகிறது. 10-ம் வகுப்பில் நண்பர்களாக இருந்தவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் கதையே 96 படமாக உருவாகியுள்ளது.
இந்நிலையில் 96 படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தனது 10-ம் வகுப்புப் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. மேலும் இதேபோல நீங்களும் உங்களுடைய 10-ம் வகுப்புப் புகைப்படங்களை வெளியிடவேண்டும் என்று நடிகை த்ரிஷா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் ரமேஷ் திலக், நடிகர் விக்ராந்த் ஆகியோருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
தனது 10-ம் வகுப்புப் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி, அதில் தான் எங்கே நிற்கிறேன் என்பதை அடையாளம் காட்டத் தவறிவிட்டார். இதனால் அத்தனை மாணவர்களில் யார் விஜய் சேதுபதி என்று கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதால் ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். பலரும் பல முகங்களைக் குறிப்பிட்டு இதுதான் விஜய் சேதுபதி என்றும் பதில் கூறி வருகிறார்கள். விஜய் சேதுபதி விடை சொல்லும் வரை இந்த விளையாட்டு தொடரும் எனத் தெரிகிறது.
இவர்களில் யார் விஜய் சேதுபதி என உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...