

வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமான 'கில்லிங் வீரப்பன்' படம் தொடர்பாக அதன் இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். 'கில்லிங் வீரப்பன்'. தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிய இந்தப் படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் வெளியானது.
படம் வெளியான சமயத்தில், எனது கணவர் வீரப்பன் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவே கில்லிங் வீரப்பன் படம் எடுக்கப்பட்டுள்ளது. யாரும் இந்தப் படத்தை பார்க்காதீர்கள் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியிருந்தார். இந்நிலையில் வீரப்பன் என்கவுண்டருக்கு உதவிய சண்முகப்பிரியா என்ற பெண் ராம் கோபால் வர்மா மீது புதிய புகாரை அளித்துள்ளார்.
'கில்லிங் வீரப்பன்' படத்தின் கதை தொடர்பாக ராம் கோபால் வர்மா தன்னுடன் ஆறு லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டதாகவும், ஆனால் ஒரு லட்சம் ரூபாய் பணம் மட்டும் இதுவரை தந்துள்ளார் எனவும், மீதி தொகையை வழங்கவில்லை என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ராம்கோபால் வர்மாவிற்கு எதிராக கேஸ் போட்டிருந்தும், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரைப்பட நடிகர்கள் சங்கம் என எல்லா இடங்களிலும் முறையிட்டும் இது வரை தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று சண்முகப்பிரியா வருத்தம் அடைந்துள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.